விஜய் சேதுபதிக்கு நடிகர் சரத்குமார் ஆதரவு!

ஆன்லைன் விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு , சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார் ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் செயலி குறித்த விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சிறு வியாபாரிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள செயலியை விஜய் சேதுபதி விளம்பரப்படுத்த எதிர்ப்பு எழுந்தது. மேலும் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் சினிமாக்களை பார்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர்கள், ஆன்லைன் மளிகை விளம்பரத்தில் நடிப்பது ஏன் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, விஜய் சேதுபதிக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் சில்லறை வணிகம் பாதிப்படையாமல் இருப்பதற்கு, மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும் என கூறினார். விளம்பரத்தில் நடிக்க கூடாது என நடிகர்களின் உரிமையை தடுக்க முடியாது எனவும், வேண்டுமென்றால் நடிகர்களிடம் இதுகுறித்து கோரிக்கை விடுக்கலாம் என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்