அரசு மருத்துவர்கள் மீதான பணிமுறிவு நடவடிக்கை ரத்து: அமைச்சர்

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியதால், அரசு மருத்துவர்கள் மீதான பணிமுறிவு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பணி முறிவு நடவடிக்கை முதலமைச்சரின் ஆணைப்படி, திரும்பப் பெறப்படுவதாக அறிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.