புதுச்சேரியில் ரவுடி மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்

புதுச்சேரியில் பிரபல ரவுடியை வெடி குண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி மீது, பல்வேறு கொள்ளை, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர், இரவு வீட்டில் இருந்து தனது காரில் சென்று கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்து, இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். தனது உயிரை பாதுகாக்க காரில் இருந்து இறங்கிய அன்பு ரஜினி, ஓட முயன்ற போது, அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்து இருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதில் அன்பு ரஜினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக அன்பு ரஜினி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்