சில நாட்களாக பகலில் வெயில், இரவில் பனிப்பொழிவு...பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டத்தில் அடர்ந்த மூடுபனி நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். புறநகர் மின்சார ரயில்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக இயக்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இன்று காலை திடீரென அடர்த்தியான மூடுபனி இருந்தது. இந்த மூடுபனி காலை 7.30 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் 10 அடி துாரத்தில் நடந்து செல்பவர் கூட தெரியாத நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டுச் சென்றனர். முகப்பு விளக்கு எரிந்தாலும் வாகனங்களை இயக்குவது பெரும் சிரமமாக இருந்ததால், சரக்கு வாகன ஓட்டிகள் பலர், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தனர். பனி விலகியதும் மீண்டும் வாகனங்களை இயக்கினர். இதேபோன்று ரயில்பாதையும் தெரியாததால், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி புறநகர் மின்சார ரயில்கள், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியும், ஹாரனை ஒலித்தபடியும் மெதுவாக இயக்க நேரிட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதேபோல் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் பனி காரணமாக மெதுவாக இயக்கப்பட்டன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)