வெளிநாடுகளுக்கு இணையாக மாறிய சென்னை பாண்டி பஜார் சாலை!

பாதசாரிகளின் பார்வையை கவரும் ஓவியம்... இளைப்பாற இருக்கைகள் என வெளிநாடுகளுக்கு இணையாக மாறியுள்ளது சென்னை பாண்டி பஜார் சாலை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நவீன நடைபாதை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் இங்கு ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் பாதசாரிகள் அடையும் சிரமத்தை சொல்லி மாளாது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன நடைபாதையை அமைத்துள்ளது சென்னை மாநகராட்சி. 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ள இப்பணிகளால் தமிழகத்தில் முதன்முறையாக முழுமையடைந்த சாலையாக உருவெடுத்துள்ளது பாண்டிபஜார் சாலை. பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல், வாகனப்போக்குவரத்தை சீர்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். அதே நேரத்தில் நடைபாதையை அழகுபடுத்தும் விதமாக தெருவிளக்குகள், மரங்களின் நிழலில் இளைப்பாற இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள், குப்பைத் தொட்டிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாலையில் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையையொட்டி, அழகிய வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் பயன்பாட்டுக்காக நவீன நடைபாதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள நவீன நடைபாதையை போன்று, சென்னையின் பிற பகுதிகளிலும் நடைபாதை அமைக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்