அவசர தரையிறக்கம் ; இண்டிகோ

சென்னை : சென்னையிலிருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென அடித்த ஸ்மோக் அலாரத்தினால் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (நவ.,1) அதிகாலையில் 163 பயணிகளுடன் குவைத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறங்கியது. தரையிறங்கியவுடன் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. விசாரணையில், விமானம் புறப்பட்டவுடன் திடீரென தவறுதலாக ஸ்மோக் அலாரம் அடித்துள்ளது. இது குறித்து முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது. விரைவில் விமானம் ஆய்வு செய்யப்பட்டு, சேவையில் ஈடுபடும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு