ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க. ஸ்டாலின்

ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மகள் ஃபாத்திமா மரணத்தில் நீடிக்கும் சந்தேகம் குறித்து ஸ்டாலினிடம் அவர் எடுத்துரைத்தார். பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ஃபாத்திமா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.