மகள் சாவுக்கு காரணமானவரை தீர்த்துகட்ட கூலிப்படையை ஏவிய பெற்றோர்!

தன் மகள் சாவுக்கு காரணமாக இருந்த அவரது காதலனை தீர்த்துக்கட்ட பெண்ணின் பெற்றோர் அனுப்பிய கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் மட்டுமே பார்க்காமலே சாத்தியமாகும் காதல் சம்பவங்கள் இடம்பெறும். இதுபோன்று நேரில் பார்க்காமல் முகநூல் மூலம் வளர்ந்த காதல், இறுதியில் இருவரும் நேரில் சந்தித்த போது, காதலை, காதலன் ஏற்க மறுத்ததால் மனமுடைந்து அப்பெண் தற்கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அசோக் குமார், என்பவர் ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் மலேசியாவைச் சேர்ந்த அருணா என்பவருக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மாற இருவரும் முகநூலில் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலனை சந்திக்க ஆவலுடன் தேனிக்கு அருணா வந்துள்ளார். அருணாவை நேரில் கண்ட அசோக்குமார், அதிர்ச்சியடைந்தார். காரணம், அருணா, அசோக் குமாரை விட 15 வயது மூத்தவர் என்பது தான். இந்த விசயம் தெரியவந்ததும், அருணாவுடனான தனது நட்பை அசோக் குமார் துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அருணா மலேசியாவிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அருணா தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த அருணாவின் பெற்றோர் மகளின் தற்கொலைக்கு காரணமான அசோக் குமாரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி தேனியைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதற்காக போடியில் உள்ள தனியார் விடுதியில் கூலிப்படையைச் சேர்ந்த 10 பேர் பதுங்கி நோட்டமிட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனியார் விடுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய இருந்த கூலிப்படையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்