உதகை நகராட்சிக்கு சொந்தமான சுமார் இரண்டு கோடி ரூபாய் நிலத்தைஆக்கிரமிப்பு
நீலகிரி மாவட் டம் , நகராட்சிக்கு சொந்தமான சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை இரண்டு ஹோட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்து, கடந்த 8 ஆண்டுகளாக தங்களது சொந்த பயன் பாட்டிற்கு வைத்துள்ளன. இது சம்மந்த மாக ஊடகங்களும் .... சமூக ஆர்வலர்களும் பல முறை மாவட்ட நிர்வாத்தின் கவனதிற்கும்நகராட்சி நிர்வாகத்தின் கவனதிற்கும் கொண்டு வந்தும் எந்த பலனும் இல்லை . காரணம் புகார் வந்த அடுத்த நொடியே, அந்த புகாரை கண்பித்து மாமூல் வசூலிப் பதையே குறிப்பிட்ட இரண்டு அதிகாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மே லு ம் ஆ ட் சி ய ர் அலுவலகத்திலோ .... நகராட்சி அலுவலகத்திலோ, எந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றாலும் இந்த இரண்டு ஓட்டல்களில் இருந்து வரும் பிரியாணி தான் , அணைத்து ஆக்கிரமிப்பு அலுவலர்களுக்கு பரிமாறப்படுகிறது. எந்த மேல் நடவடிக்கை யும் எடுக்கப்படுவதில்லை. உதகை மேல் பஜார் ரோட்டையும், கீழ் பஜார் ரோட்டையும் இணைக்கும் நகராட்சி வழிப் பாதை 4 சென்ட் பரப்பளவு கொண்டதுஉதகை நகரின் திட்ட வரைபடத்தில் நகராட்சி உருவான காலத்திலிருந்து, இந்த நடைபாதை இருந்து வந்துள்ளது. உதகை நகரின் முக்கிய வியபார மையத்தில் அமைந் திருக்கும் இந்த 4 சென்ட் நிலம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் இன்று கிடைக்காதுஇந்த பாதையை நஹார் ஓட்டல் நிர்வாகம் தடுப்பு சுவர் எழுப்பி வாகன நிருத்துமிடமாக மாற்றி இரும்பு கேட் போட்டு அடைத்துள் ளனர். அது மட்டுமின்றி அப்பகுதி மக்களின் அத்தியவசிய பயன்பாட்டிற்காக இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச கழிப்பிடத் தையும் இந்த நஹார் ஓட்டல் நிர்வாகம் விட்டு வைக்கவில்லை. இந்த ஆக்கரமிப்பு நிலத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய். நஹார் ஓட்டல் நிர்வாகம், நகராட்சி கழிப்பிடத்தை யும் விட்டுவைக்காமல் அதன் மேல் தளத்தில் வாகன நிறுத்தம் அமைத் துள்ளது. இ த * அ ப் ப கு திவியபாரிகளும், பொதுமக்களும், நடைபாதை வசதி மற்றும் கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த அழகில் நகராட்சி நிர்வாகம்ஆக்கரமிக்கப்பட்ட கழிப்பிடதிற்கு பிளீசீங் பவுர் மற்றும் துப்புறவுக் கான பினாயில் போன்ற பொருட்கள் பயன்படுத்தியதாக போலி கணக்கு காட்டி வருகின் றனர். | அடுத்ததாக, உதகை மார்கட் அருகே தாஜ் ஒட்டல் இருக்கிறது. இதன் உரிமையாளர் கோபால கிருஷ்ணன். அதிமுக வை சேர்ந்த இவர் உதகை நகராட்சி துணை தலைவராக இருந்தவர். பதவி காலத்திலிருந்த போது, இவரது தாஜ் ஓட்டலை ஒட்டியிருந்த நகராட்சி குப்பை கொட்டும் இடத்தையும் விட்டு வைக்காமல் ஆக்கரமித்து தன் ஓட்டலுக்கு சமையல றையை கட்டிவிட்டார். இந்த ஆக்கரமிப்பு குப்பை கொட்டும் இடத்தின் இன்றைய மதிப்பு சுமார் 80 லட்ச ரூபாய். ஒருவன் நகராட்சி கழிப்பிடத்தை ஆக்கரமித் துள்ளான். இன்னொருவன் நகராட்சி குப்பை தொட்டியை ஆக்கரமித்துள்ளான். இந்த இருவருமே, நகரில் முக்கிய பிரபலங்கள். வெளியே சொன்னால் வெட்ககேடு..... நகராட்சிக்கு சொந்தமான சுமார் இரண்டு கோடி மதிப்புடைய ஆக்கரமிப்பு நிலத்தை, மீட்க முடியாமல் முட்டுக் கட்டையாக இருந்த வர் நகராட்சி பொறியாளர் இரவிதான். இவர் பொறுப்பு ஆணையாரக இருந்த காலங்களில் தான் உதகை மார்கட்டை சுற்றியும், ஏடிசி பஸ் நிலையத்தை சுற்றியும் பல ஆக்கரமிப்பு கடைகள் உருவா னது. பல விதி மூறிய கட்டிடங் களும், காட்டேஜ்களும் கட்டப் பட்டது. அனைத்திற்கும் காரணம், லஞ்சம்... லஞ்சம்.... லஞ்சம் தான். பொறியாளர் இரவி பல வருடமாக உதகை நகராட்சியிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?.... இரவியிடம்,யாராவது ஒரு பெரிய தொகையை கொடுத் திருந்தால், நகராட்சி அலுவலகத்தையே ஆக்கிரமித்து விற்று விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். தற்போது உதகை நகராட்சி ஆணையராக சரஸ்வதி பொறுப் பேற்றுள்ளார். இவர் குன்னூர் நகராட்சி ஆணையராக இந்த போது, துணிச்சலோடு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து சட்ட விதி மீறல்களுக்கு தீர்வு கண்டவர். லஞ்ச கரைபடாத கரங்களுக்கு சொந்தகாரர் என பெயரெடுத்த நேர்மையான பெண் அதிகாரி.எட்டு ஆண்டுகளாக ஆக்கரமிப்பில் இருக்கும் நகராட்சி நிலங்களை மீட்டெடுப் பார் என்று நம்புவோமாக.