உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை: காதர் மொகிதீன் கருத்து

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அயோத்தி தீர்ப்பு பற்றி அறிக்கை அளித்துள்ளார். பாபர் மசூதி - ராமஜென்மபூமி இடம் சம்பந்தமான நீண்டகால வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சத்தை பற்றியும் வாதப்பிரதிவாதம் தேவையில்லை என்று காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் அனைவரும் இணைந்து வாழும் சமூக நிலையை உருவாக்க பாடுபடுவதே அனைவருடைய தேசிய கடமை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)