'எம்ஆதார்' (mAadhaar) செயலியை மிகவும் பாதுகாப்பு அம்சங்களுடன் மொபைல் ஆதார் செயலி

புதுடில்லி: 'எம்ஆதார்' (mAadhaar) செயலியை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றி, புதிய பதிப்பை ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., சாதனங்களுக்காக இந்திய தனித்துவமான அடையாள ஆணையமான யுஐடிஏஐ, அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் முந்தைய பதிப்பை நீக்கி புதிய பதிப்பை உடனடியாக நிறுவ வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹிந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமி உள்ளிட்ட 13 மொழிகளில் உள்ள 'எம்ஆதார்' செயலியில் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் விதமாக புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக, யுஐடிஏஐ, முந்தைய பதிப்பை நீக்கிவிட்டு புதிய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியது பயனர்கள் ஆதார் அட்டையை டவுண்லோடு செய்வது, ஆப்லைன் கே.ஒய்.சி., கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது, ஆதார் மறுபதிப்பு செய்து பெறுவது, முகவரியைப் புதுப்பித்தல், ஆதார் விவரம், மின்னஞ்சல் சரிபார்த்தல், முகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை மற்றும் பல்வேறு ஆன்லைன் கோரிக்கைகளின் நிலையை சரிபார்த்தல் உள்ளிட்ட வசதிகள் இந்த புதிய செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் ஆதார் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயனர்களே லாக் செய்யலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)