மாவட்ட மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்...

சென்னை : சேலம் , திருவாரூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயணன் பாபு வெளியிட்ட அறிக்கை: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி டீனாக மாற்றம். கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதன்,, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக மாற்றம். திருவாரூர் கல்லூரி டீன் கே. விஜயகுமார், திண்டுக்கல் டீனாக இடமாற்றம். மதுரை மருத்துவக் கல்லூரி டீன் கே. வனிதா, திருச்சி அரசு விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி டீனாக நியமனம். இதேபோல், 13 பேருக்கு டீனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.