மு.க. ஸ்டாலின், வயது முதிர்ந்த குழந்தை: அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு பதவிகள் வகித்திருந்தாலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வயது முதிர்ந்த குழந்தை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்திருப்பதன் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அக்கட்சியினர் விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகி உள்ளதாக குறிப்பிட்டார். எனினும், யார் தடுத்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என குறிப்பிட்ட அவர், புதிய மாவட்டங்களுக்கும் தேர்தல் வரையறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என முதலமைச்சர் கூறியபின்பும், தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட திமுக முயற்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு