ஓபிஎஸ்ஸை பார்த்து நீங்கள்ளாம் ஆம்பிளையா என்று கேட்டேன் - குருமூர்த்தி

நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து கேட்டேன் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குரு மூர்த்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, 'மகாராஷ்டிராவில் நிலையற்ற தன்மைக்கு காரணம் சரத்பவார். அங்கு நடப்பது அரசியல் நாடகம், பாஜகவும் அங்கு தர்மசங்கடத்தில் இருக்கிறது. பா.ஜ.க தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் நிச்சயம் விமர்சனம் செய்யும். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்க முயன்றால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆளுநர் ஆட்சி அமைத்து 6 மாதத்தில் எந்த ஒரு மாற்றம் கொண்டு வர முடியாது. ரஜினியை கொண்டுவந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்த முடியும். தி.மு.க குடும்பமே கொள்ளை அடிப்பார்கள். குடும்ப ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பெரிய சக்தி தி.மு.க தான். ரஜினி குடும்ப ஆட்சியை கொண்டுவர விரும்பாத நபர், ரஜினிகாந்தை விரைவில் அரசியலுக்கு வர அழைத்தால்தான் தமிழகத்திற்கு ஒரு மாறுதல் ஏற்படும். சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்த பொழுது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார். இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன்'என்று தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு