பிரதமர் மோடிக்கு கார்த்தி கடிதம்

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில், அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டு, 11 நோயாளிகள், மத்திய அரசுக்கு விண்ணப்பித்தனர். இதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை காங்., - எம்.பி.,யுமான கார்த்தி பரிந்துரை செய்தார். இதன்படி, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து, மருத்துவ நிதியாக, 29 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். இந்நிதியை பெற்று, அறுவை சிகிச்சை மூலம் நலமடைந்த, 11 நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தார், பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். தன் பரிந்துரையை ஏற்று நிதி ஒதுக்கியதால், பிரதமருக்கு நன்றி தெரிவித்து, கார்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.