எஸ்.ஐ., தற்கொலை; உருக்கமான கடிதம், டைரி சிக்கியது

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் வளாகத்திலேயே துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன், விபல்குமார் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:எனக்கு உடல்நிலை சரியில்லை, நீங்கள் எல்லாரும் அனைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தீர்கள், இருப்பினும் எனக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னை மன்னித்து விடுங்கள். மனைவி கிருஷ்ணபிரியா என்னை மன்னித்துக் கொள். குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும்.இவ்வாறு, அதில் உருக்கமாக எழுதி உள்ளார். புதுச்சேரி, தொண்டமாநத்தத்தை சேர்ந்தவர் விபல்குமார், 36; நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். வில்லியனுாரில், குடும்பத் துடன் வசித்து வந்தார். பாலியல் தொந்தரவு குறித்து ஒரு பெண் அளித்த புகாரை விசாரிப்பது தொடர்பாக, உயரதிகாரிகள் அவரிடம் கடுமை காட்டி உள்ளனர். அதை தொடர்ந்து, ஏழு நாட்கள் விடுப்பில் இருந்த விபல்குமார், நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்தார். பணி முடித்து, காலை 9.00 மணிக்கு, போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பிற்கு சென்றார்.நேற்று மதியம் 12.௦௦ மணிக்கு மேலாகியும் அவர் பணிக்கு வரவில்லை. ஏட்டு வாழுமுனி, விபல்குமாருக்கு மதிய உணவு வாங்கிக் கொண்டு, 12.15 மணிக்கு அவரது குடியிருப்பிற்கு சென்றார். அறை பூட்டியிருந்ததால், குரல் கொடுத்தும், கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது, மின்விசிறியில் துாக்கில் இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.ஐ.ஜி., சுரேந்திரசிங்யாதவ், சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், எஸ்.பி., ரங்கநாதன் ஆகியோர் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று, ஆய்வு செய்தனர். அறையில், விபல்குமார் இறப்பதற்கு முன் எழுதிய மூன்று பக்க கடிதம், ஒரு டைரியினை கைப்பற்றினர். வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன் முன்னிலையில், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபல்குமார், கடந்த 2011ம் ஆண்டு நேரடியாக எஸ்.ஐ., பணியில் சேர்ந்தார். கடந்தாண்டு, நெட்டப் பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவ ருக்கு, மனைவி கிருஷ்ணப்பிரியா, நவீன்பாரதி, 4, விஷ்வா,3, என இரு குழந்தைகள் உள்ளனர். முற்றுகை எஸ்.ஐ., தற்கொலையை அறிந்து, போலீஸ் நிலையத்தில் திரண்ட பொது மக்களை போலீசார் தடுத்தனர். மதியம் 2.00 மணியளவில் கேட்டை உடைத்து உள்ளே சென்று, உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதையடுத்து, எஸ்.ஐ. சடலத்தை பார்க்க அனுமதித்தனர். மோதல் குழந்தைகளுடன் சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணபிரியா, கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார். மகளிர் போலீசார், அவருக்கு ஆறுதல் கூறினர். விபல்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத அவரது பெற்றோர், மகன் இறப்புக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டேன் என கதறினர். அவர்களிடம், கிருஷ்ணபிரியாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)