ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது : கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளா கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி அவர் தங்கியுள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதணையும் அளித்துள்ளது . ஐ ஐ டி கல்வி நிறுவனத்தில் கடந்த ஒராண்டில் மட்டும் ஐந்து பேர் தற்கொலை செய்து மரணம் அடைந்துள்ளார்கள் , இனி வரும் காலங்களில் இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . மாணவி பாத்திமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். எனவே : மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எந்தவித பாரபட்சம் பாராமல் பிணையில் வெளியில் வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , மாணவி பாத்திமாவின் குடும்பத்திற்கு இழப்பிடு 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் , பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு