ஃபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல்...!

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐஐடியில் படித்த கேரளா மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஃபாத்திமா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்ககோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், ஃபாத்திமா மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.