தேசிய பத்திரிகை தினம் ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி

.இந்தியாவில் 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' அமைப்பு 1966, நவம்பர் 16ல் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் 16ல்(இன்று) தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது, அதன் செயல்பாடுகளை கண்காணித்தல், தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல் போன்றவை 'பிரஸ் கவுன்சிலின்' முக்கிய பணி. ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி மிகவும் முக்கியமானது.செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதையை வகுத்துக் கொடுப்பது என பல பொறுப்புகள் பத்திரிகைக்கு உண்டு."நெஞ்சில் துணிவோடு, நேர்மை தவறாத ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச பத்திரிகையாளர்கள் தின நல் வாழ்த்துகள்"நேர்மை தவறாமல், நெஞ்சில் துணிவோடும், சமூக அக்கறையோடு பல்வேறு செய்திகளை உடனுக்குடனும், நேரலையாகவும் வெளியிட்டு, சமூக அவலங்களையும், அரசின் மெத்தனப்போக்கையும் தோலுரித்துக் காட்டி சமூக மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அச்சு, காட்சி, இணையதள மற்றும் சமூக வலைதள ஊடக நிறுவனங்களுக்கும்....,ஊடகங்களின் பெயர்களும், வகைகளும் வெவ்வேறாக இருந்தாலும் "வாய்மையே வெல்லும்" என்பதை மையமாகக் கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பத்திரிகை/தொலைக்காட்சி/இணையதள/சமூக வலைதள ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து "ஊசி நுழைய முடியாத இடத்தில் கூட உள் நுழைந்து, உயிரையும் துச்சமென கருதி" களப்பணியாற்றி வரும் செய்தியாளர் நண்பர்களுக்கும், செய்தியாளர் நண்பர்களுடன் இணைந்து அச்செய்தியை காட்சிபடுத்த உயிரைக் கொடுத்து படம் பிடிக்கும் சக புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர்களுக்கும், செய்திகளை அச்சு வடிவிலும், காட்சி வடிவிலும் மக்களிடையே சென்றடைய காரணமாக இருந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், செய்திகளை நடுநிலை தவறாமல் வெளியிட முழு சுதந்திரம் கொடுத்துள்ள ஊடக நிர்வாகங்களுக்கும் நவம்பர் -16 இன்று *"சர்வதேச பத்திரிகையாளர்கள் தின நல் வாழ்த்துக்கள்... மாநிலத் தலைவர்,மு.திவான் மைதீன்,தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (3579/CNI).


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு