பிரதமர் இல்லத்திற்குள் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படாத போது : சந்தேகத்தை கிளப்பிய எஸ்பிபி

புதுடில்லி : பிரதமர் இல்லத்திற்குள் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படாத போது பாலிவுட் நடிகர், நடிகைகள் மட்டும் எப்படி செல்பி எடுத்துக் கொண்டனர் என பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்தேகத்தை கிளப்பி உள்ளார். மகாத்மா காந்தியின் 150 வத பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி, சினிமா பிரபலங்கள் பலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் உடனான ஆலோசனைக்கு பிறகு சினிமா பிரபலங்கள், பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பிரதமர் அழைப்பு விடுத்த இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்றும், பாலிவுட் பிரபலங்களே அதிகம் அழைக்கப்பட்டனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது பற்றி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக்கில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், நான் ராமோஜி ராவ்க்கு நன்றி உள்ளனர். ஏனெனில் அக்.,29 அன்று பிரதமர் மோடி அளித்த விருந்தில் அவரால் நான் கலந்து கொண்டேன். நாங்கள் உள்ளே செல்வதற்கு முன் நுழைவாயிலிலேயே எங்களின் மொபைல்போன்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டோம். அதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் பல சினிமா பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்