புதைசாக்கடை சீரமைப்பின்போது விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி மரணம்

கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே புதைசாக்கடை சீரமைப்பின் போது விஷவாயு தாக்கி யதில் துப்புரவு தொழிலாளி உயிரி ழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ரயில் நிலையம் அருகே கடந்த பல நாட்களாக புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஆளிறங்கும் குழாய் வழியாக கழிவுநீர் வெறியேறியது. இதையடுத்து, தனியார் துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு, நவீன வாகனத்தின் உதவியுடன் அடைப்பைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்சா(50), குடிதாங்கியைச் சேர்ந்த வீரமணி, வீபூதரன், ராஜா ஆகிய தனியார் துப்புரவு தொழி லாளர்கள் 4 பேர் நேற்று மாலை 6 மணியளவில் புதைசாக்கடை அடைப்பை சீரமைக்க நகராட்சி வாகனத்தில் ரயில் நிலைய பகுதிக்கு வந்தனர். அப்போது, கழிவுநீர்க் குழாயில் அடைப்பை சீர்செய்ய முயன்ற போது, அதற்கான டியூப் குழா யின் உள்ளே செல்லாததால், சாதிக்பாட்சா குனிந்து ஆளிறங் கும் குழாயைப் பார்த்தார். அப்போது விஷவாயு தாக்கியதில் நிலைதடுமாறி அந்த குழிக்குள் அவர் விழுந்தார். அவர் வந்து விடுவார் என அங்கு காத்திருந்த மற்ற மூவரும், வெகுநேரமாகியும் சாதிக்பாட்சா வெளியே வராததால் அச்சமடைந்து, அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழருவி, மாவட்ட விவசாய பாது காப்பு அமைப்பாளர் பாலகுரு, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செந்தில் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்தனர். உடனே, அவர்கள் புதைசாக்கடையின் அருகில் சென்று பார்த்தபோது, குழாய்க் குள் விஷவாயு தாக்கியதில் சாதிக்பாட்சா இறந்து உள்ளே சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித் தனர். அவர்கள் வந்து, சாதிக் பாட்சா வின் உடலை மீட்டு, பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கும்பகோணம் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு