புத்தாண்டு , பொங்கலுக்கு சிறப்புரயில்

சென்னை:கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு, பொங்கலுக்கு , தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவை பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. கோவை தாம்பரம் சிறப்பு ரயில் டிச.,23,25,30 ஜனவரி1,6,8 ,13,15,20,22,27 ,29 தேதிகளிலும் சிறப்பு கட்டண ரயில் பிப்.,3,5 தேதிகளில் இரவு10 மணிக்கு இயக்கப்படும். மேலும் கோவை தாம்பரம் சிறப்புரயில் டிச.,28, ஜனவரி 4,11,18,25 மற்றும் சிறப்பு கட்டண ரயில் பிப்.,1 ஆகிய தேதிகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும். தாம்பரம் கோவை இடையே டிச., 24,26,31 ஜனவரி2,7,9,16,21,23, 28,30 மற்றும் சிறப்பு கட்டண ரயில் பிப், 4 ,6 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு இயக்கப்படும். நெல்லை தாம்பரம்: ஜன2,9,23,20, பிப்.,6 ஆகிய தேதிகளில் இரவு 9மணிக்கு புறப்படும் தாம்பரம் நெல்லை : ஜன,3,17, 24,31, பிப்.,7தேதிகளில் இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும். கோவை சந்திரகாச்சி சுவிதாசிறப்பு ரயில் டிச.,6,13,20,27 தேதிகளில் இரவு9.45 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (30 ம்தேதி) காலை 8 மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. A