சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி சஹி நியமனம்

சென்னை, உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சஹி-க்கு, வரும் 11-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்... சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, நவம்பர் 11ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஏ.பி சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது..