மேடவாக்கத்தில் ஏரி ஆக்கிரமிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேடவாக்கம் சேரன் நகரில் அமைந்துள்ளது கிளினிக்கல் குளோபல் ஹெல்த்சிட்டி, இப்பகுதி எம்.எல்.ஏ, அரவிந்த் ரமேஷ், இம்மருத்துவமனையால் இப்பகுதி ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதனால் இப்பகுதி முன்னேறி வருகிறதாம். தினமும் ஏரியில் மண் கொட்டி நிரப்பி, லேஅவுட் செய்து, கல் தூண் இட்டு குடியிருப்பு பகுதிகளாகவும், தங்கும் தனியார் விடுதிகளாகவும் கட்டி ஏரியை ஆக்கிரமித்துள்ளனர். -ஏரி என்பதற்கான அடையாளம் வீடுகளை சுற்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் ஆம்பல் பூக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஜெசிபி மூலம் ஏரியில் மண் நிரப்பி சாலைகள் அமைத்து, நகர்களாக மாற்றி குடியிருப்பு பகுதிகளாக விற்கப்பட்டு வருகிறது. போலி ஆவணங்கள் தயாரித்து ஊழல் வாதிகளையும், கூலிப்படைகளையும் வைத்து செய்யும் இச்செயலில் பத்திரப் பதிவு எதன் அடிப்படையில் செய்கின்றனர். நிலம் வாங்குபவர் எவரிடம் விலை கொடுக்கின்றனர். ஏரியின் நிலப்பரப்பளவை குறைத்து காட்டினால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற யுக்தியை கடைபிடிக்கலாம் என நினைத்துள்ளார்கள். - நீர் நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது எனவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன வும் ஆணை இருக்க , ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் அதன் ஏஜென்டின் மீதும், அத் தொகுதி எம்.எல்.ஏ மீதும் நடவடிக்கை எடுத்து ஏரியை எவ்வாறு மீட்கப்போகின்றனர். வருவாய் துறை ஆய்வாளர்களை கொண்டு தவறான அறிக்கை அனுப்பி, அதிகாரிகளை அடக்கி குற்றவாளிகளை தப்பிக்க வைத்தாலும், இயற்கை நினைத்தால், அதனுடைய ஏரி பரப்பளவை தானாகவே எடுத்துக் கொள்ளும். ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற இயற்கைக்கு தெரியும். - ஏரிப்பகுதியில் மண் இறுக்கம் மற்ற நிலையில், அடுக்குமாடி கட்டிடத்திற்கு அனுமதி எப்படி வழங்கப்பட்டுள்ளது. - அது மனிதர்களுக்கு பேராபத்தை அளிக்கும் என தெரிந்தும் மனிதர்களை கொன்றாவது பண மோசடி செய்யும் பண வேட்டைக்காரர்களை கண்டு பிடித்து வேட்டையாடினால்தான் மனிதர்களுக்கு பாதுகாப்பு உறுதி. மனிதர்களை பாதுகாக்க விதிமுறைகளும் சட்டங்களும் இருக்க, அதை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, தற்காலிகப் பண நக்கம் செயது ஏாயை மடபார்களா?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)