பெண் குழந்தைகளுக்காக ’தோழி ’ என்ற புதிய அமைப்பு - சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சென்னை காவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தோழி அமைப்பிற்காக செயல்பட 70 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளை அணுகும் முறை குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி  தலைமையில் மனநல மருத்துவர் ஷாலினி பயிற்சி அளித்தார். அதன் பின்னர் தோழி அமைப்பிற்காக செயல்படும் பெண் காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது. *


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு