அதிமுக கொடிகம்பம் விழுந்த விபத்தால் கால்களை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை.

கோவையில் அதிமுக கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான பெண்ணிற்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் 48 மாற்றுத்திறனாளிகள் ஜோடிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சரோஜா, உள்ளாட்சி தேர்தலில் மாற்று திறனாளிகள் போட்டியிட முடியாத நிலையை மாற்றி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக கொடிகம்பம் விழுந்து விபத்தில் சிக்கி இரு கால்களை இழந்த பெண்ணிற்கு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் அந்த பெண்ணின் தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சரோஜா தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என பல்வேறு துறைகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சரோஜா கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்