கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனங்களை வழங்கிய ஓ.பி.எஸ்!

அதிமுக ஆட்சியில் ஏழை எளிய கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பு வளர்ச்சி குழு சார்பாக 1,360 ஏழை-எளிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, வளைகாப்பு சீதனங்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் விதமாக, ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு மதிய உணவு அளித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சிகள் இனி வரும் காலங்களிலும் தொடரும் எனவும் பேசிய ஓ.பி.எஸ்., பின்னர் அவர்களோடு இணைந்து உணவு அருந்தினார்.