ராகுல் காந்திக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இந்த வாரம் வழங்குகிறது.

டெல்லி: நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இந்த வாரம் வழங்குகிறது. கடந்த லோக்சபா தேர்தலை ஒட்டி நாட்டின் பாதுகாவலர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அப்போது ராபேல் போர் விமானங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். எனவே பிரதமர் இந்த நாட்டின் பாதுகாவலர் கிடையாது, காவலரே திருடர் என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களில் இவ்வாறு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த எம்பி மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தனது தவறை ஒப்புக் கொண்ட ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த வழக்கில்தான் இந்த வாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பை ஏற்பதா, அல்லது, ஏற்காமல் விடுவதா என்பது, உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது. ஒருவேளை மன்னிப்பு கேட்காமல் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டால், அவர் பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல்காந்தியை, பொறுத்த அளவில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டால் அதில் அமைதியும் தோல்வியுற்ற நிலையில் வயநாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கு எதிராக வந்தால் வயநாட்டில் அவர் பெற்ற வெற்றி செல்லாதோ என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. ஒரு வேட்பாளரை எப்போது தடைசெய்ய முடியும்? மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 8 (3) இன் படி, ஒரு நபருக்காவது, எந்தவொரு குற்றத்திற்காகவும், 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். ஒரு நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜாமீனில் அல்லது பரோலில் இருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். அவமதிப்பு சட்டம்: நீதிமன்ற அவமதிப்பு பிரிவு 12, நீதிமன்ற அவமதிப்புக்கு என்ன தண்டனை என விளக்குகிறது. நீதிமன்றத்தை அவமதித்தால், இந்த சட்டத்தின்கீழ், 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,000 அல்லது இரண்டும் விதிக்கப்படும்.