குழந்தைகள் தின விழாவில் பாரம்பரிய விளையாட்டினை விளையாடிய சிறப்பு பள்ளி மாணவர்கள்

திருச்சியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு எலைட் சிறப்பு பள்ளி முப்பெரும் விழாவை பள்ளி வளாகத்தில் நடத்தியது. சிறப்பு குழந்தைகள் ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய விளையாட்டினால் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டு நடத்தப்பட்டது. கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, உள்ளிட்ட விளையாட்டுகளை சிறப்புக் குழந்தைகள் பெயர்களைக் கூட கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் வீடியோ கேம்ஸ், செல்போன் மோகம் அதிகரித்துவிட்டது. பழந்தமிழர் விளையாட்டுகளில் சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற விளையாட்டுகளை பயிற்சி அளித்து போட்டி நடத்தப்பட்டது. பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்தும் உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே உள்ளது. பண்டைய விளையாட்டுகளில் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது சிறப்பு குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. பம்பர விளையாட்டில் மனம் ஒருநிலைப் படுகின்றது. கை விரல்களுக்கு, தோள்பட்டைக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது. பல்லாங்குழி பரமபதம், சதுரங்க விளையாட்டு, நொண்டி அடித்தல், கண்ணாமூச்சி, ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்துச்சாம், கிச்சு கிச்சு தாம்பலம் உள்ளிட்ட போட்டியிலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரி கண்ணன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பள்ளி தாளாளர் முத்துலட்சுமி வரவேற்க,நிறைவாக கௌரி நன்றி கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)