துணை முதல்வர் ஓ.பி.எஸ்- க்கு உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு தொழில் முதலீடுகளை திரட்டவும், முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்கவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்கா சென்றுள்ளார். சிகாகோ விமான நிலையம் சென்றடைந்த துணை முதலமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகாகோ தமிழ் சங்கம் சார்பில் இன்று நடைபெறும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார்.