ஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்கள்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள்உணவளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இந்த சீசனில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அப்படி செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வழியெங்கும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள்உணவளிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.