ரயில் சேவை மீண்டும் தொடக்கம் மேட்டுப்பாளையம்-குன்னூர்

மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது. கடந்த 15-ம் தேதி பெய்த கன மழையால், ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவை முதலில் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை 29 ஆம் தேதி வரை ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் ரயில் பாதையில் கிடந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு காலை 7.10 மணிக்கு 200க்கும் மேற்பட்டோருடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு