அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டவர்கள், நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க செல்வது பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் நடக்கும், நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அதிகளவு மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு 5.5 கோடி பேர், விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள், பனிக்கட்டிகளை தாண்டி செல்வதில் சிரமம் ஏற்படும். கொலராடோ முதல் மிச்சிகன் வரையிலும் மிசிசிப்பி வரையிலும் கடுமையிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நெபரஸ்கா, தெற்கு டகோடா, மின்னிசோட்டா, விஸ்கோன்சின் பகுதிகளில் 6 முதல் 12 இன்ச் வரையில் பனிப்பொழிவு இருக்கும் எனவும், இதனால், வெளிச்சம் குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொலராடோவில் 20 இன்ச் அளவுடன் அமெரிக்காவில் பனிப்பொழிவு துவங்கியது. டென்வர் வடமேற்கில் நேற்று முன்தினம் 22.2 இன்ச் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. டென்வரில் நகரில் 11 இன்ச் அளவிற்கும், அங்குள்ள விமான நிலையத்தில். 9.5 இன்ச் அளவிற்கும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், 500 விமானங்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யோமிங் பகுதியில் 300 கி.மீ., துாரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கொலம்பியா, மிசோரியில் 90 கி.மீ., துாரத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் டிரக்குகளில் மக்கள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பனிப்பொழிவு கிழக்கு திசை நோக்கி நகரும் போது, நியூயார்க் நகரிலும் பாதிப்பு ஏற்படும். இதனால், நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும். இங்கு, பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரிகன், வடக்கு கலிபோர்னியா போன்ற மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவும், கடுமையான சூறவாளியும் ஏற்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்