சபாஷ் காவல் துறை!

அயோத்திய தீர்ப்பு இன்று வெளிவருவதை முன்னிட்டு காவல் துறை உடனடனடியாக நேற்று இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை காவல் துறை கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோருடன் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டம் இரவு 12.30 மணி வரை நடைபெற்றது. இதற்கு முன்பு அனைத்து முஸ்லீம் அமைப்புகள் தலைவர்களிடம் நேரிலும், தொலைபேசியிலும் சட்டம் ஒழுங்கு காக்க ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டனர். அவர்களும் எங்கள் மதத்தை புன்படுத்தாமல் இருந்தால் போதும் என்றும் தீர்ப்பு எதுவானாலும் அதை முழுமையாக ஏற்பதாகவும் உறுதி அளித்தனர். பின்பு விடியர் காலை 3 மணியில் இருந்து 4 மணி வரையில் மீண்டும் அனைத்து கூடுதல் ஆணையர்கள், துணை ஆணையாளர்கள் வரவைத்து ஆலோசனை மேற்கொண்டார் மாநாகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அப்போது அவர் அனைத்து காவல் நிலையங்களில் ஒருவர் மட்டும் இருக்க கூறி மற்றவர்கள் எல்லாம் அனைத்து மசூதி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். இரவு முழுவதும் சட்டம் ஒழுங்கை காக்கவும் அமைதியான சூழ்நிலை உருகாக்கவும் மாநகர ஆணையரின் கடின உழைப்புக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. தீர்ப்புக்கு முன்பு பலர் பதட்டத்துடன் இருந்தாலும் தீர்ப்புக்கு பிறகு எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் சென்னை மாநகரத்தை அமைதி பூங்காவாக இருக்க செய்த மக்கள் நாயகன் திரு.ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கு கிரேட் சல்யூட்.