நீங்கள் வருமான வரி கணக்கு எண் தவறாக அளித்தால் என்ன தண்டனை......

வங்கிகணக்கு தொடங்குவது, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது என பல பணிகளுக்கு கட்டாயமாக இருக்கும் பான் கார்டு எண் தவறாக கொடுத்தால் வருமான வரிச்ச்சட்டத்தின் படி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிக்கணக்கு தொடங்குவது முதல் பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு கட்டாய தேவையாக உள்ளது. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் என்றில்லாமல், மாத ஊதியம் பெறுபவர்களாகவே இருந்தாலும் பான் கார்டு அவசிய தேவை. மோட்டார் வாகனங்கள் வாங்குவது, நிலப்பத்திரம் பதிவு என்று அனைத்திற்கும் கட்டாயமாக பான் கார்டு உள்ளது.இந்த நிலையில், பான் கார்டு எண்ணுக்கான விதிமுறைகளின் படி, உங்கள் நிரந்தர பான் எண் மற்ற விவரங்களுக்கிடையில், ஒர் படிவத்தை நிரப்பும் போது அதை சரியாக கொடுக்க வேண்டும். அதை தவறாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.10,000 அபராதம் என்றும் கூறப்பட்டுள்ளது.வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், யாராவது வருமான வரித்துறையின் கீழ், யாராவது தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம் வரை அபாராதம் விதிக்கக் கூடும்.ஒரு முறை பான் கார்டு ஒதுக்கப்பட்டதும், உரிமையாளர்கள் வாழ் நாள் முழுவதும் பான் கார்டு செல்லுபடியாகும் என்பதால் நீங்கள் மீண்டும் இதற்கு விண்ணபிக்க முடியாது. நீங்கள் உங்களது முகவரிகளை மாற்றினாலும் பான் எண் எப்போதும் மாறாது என்றும் கூறப்படுகிறது. வங்கிகளில் நீங்கள் பான் எண் தவறாக அளித்தாலும், முகவரி மூலம் அவர்கள் உங்களது எண்ணை கண்டறிய முடியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்