தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதுமை திட்டங்கள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதுமையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தும்' என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தென்காசி மாவட்ட தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:தேனருவி முதல் பாலருவி வரையிலான குற்றால அருவிகளின் குளிர்ச்சியை தனதாக்கியது தென்காசி மாவட்டம். தமிழகம் என்ற தங்க கிரீடத்தில் பதிக்கப்படும் வைரமாக தென்காசி மாவட்டம் உருவாகியிருக்கிறது. அனைத்து மக்களும் நீடித்த நிலையான வளர்ச்சியை பெறவேண்டும், உயிரோட்டமுள்ள அறிவுசார் சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்பது ஜெயலலிதா கண்ட கனவு. பொதுமக்களின் தேவைகள் வருவாய்த்துறையை சார்ந்திருக்கிறது. இதனால், தமது ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் 5 மாவட்டங்களையும், ஜெயலலிதா 7 மாவட்டங்களையும் உருவாக்கினர். அவர்களின் வழியில், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தென்காசி என்று சொல்லக்கேட்டதும் காசிவிஸ்வநாதர் கோயிலும், குற்றால அருவிகளும் நம் கண்முன் விரியும். தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு அதிமுக அரசுதொடர்ந்து புதுமையான திட்டங்களை செயல்படுத்தும். தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக தென்காசி திகழும் என்று நம்புகிறேன் என்றார் துணை முதல்வர். சாதனை ஆட்சி மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: குடிமராமத்து திட்டத்தால் பருவமழைக்கு முன்பாகவே தமிழகத்தில் ஏரிகள், குளங்கள் நிரம்பிஇருக்கின்றன. நீர் மேலாண்மையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக சாதனை படைத்துள்ளது. முதியோர் ஓய்வூதியம் 5 லட்சம் பேருக்கு கூடுதலாக வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். முதல்வரின் சாதனைகள் கின்னஸ் சாதனை. அதிசயமும் அற்புதமும் 2021-ல்நடக்கும் என்று எதிர்பார்த்து கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இப்போதே அதிசயமும், அற்புதமும் நடைபெறுகிறது. அதிமுகவைஇருபெரும் தொண்டர்கள் தலைமை தாங்கி நடத்துவதைப் பார்த்து அனைவரும் பிரமிக்கிறார்கள் என்றார் அவர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)