சமூக வலைத்தளத்துக்கு மாற்றமடைந்து வருகின்றனர்

ட்விட்டரை பயன்படுத்திவருபவர்கள் சினம் கொண்டுஅதிலிருந்து வெளியேறி Mastodon என்ற சமூக வலைத்தளத்துக்கு மாற்றமடைந்து வருகின்றனர். இதன்காரணம் என்ன என்பதை இத்தொகுப்பில் அறிந்துகொள்வோம். கணக்குகளை திடீரென சஸ்பெண்ட் செய்யும் ட்விட்டரின்போக்கு மற்றும் அதன் கணக்குகளை வெரிஃபைட் செய்யும்விவகாரங்களால் அதிருப்தி அடைந்துள்ள பெருமளவுட்விட்டர்வாசிகள் Mastodon எனப்படும் ஓபன் சோர்ஸ்தளத்துக்கு மாறிச் செல்லத்தொடங்கியிருப்பதாககூறப்படுகிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் ட்விட்டர்கணக்கு இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது இந்த பிரச்சனை வெளியுலகத்துக்கு வந்தது. வெறுக்கத்தக்க அல்லது முக்கியமான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பகிர்ந்ததால் ஹெக்டேவின் கணக்கை முதல் முறை விதிமுறைகளை மீறியதாக ட்விட்டர் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் ஆட்சேபத்தக்க தகவல் ஒன்றை ரீட்வீட் செய்ததற்காக இரண்டாவது முறையாக அவரின் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனிடையே குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சிலரின் கணக்குகளை தகுந்த காரணமின்றி ட்விட்டர் முடக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாங்கள் அதுபோன்று பாரபட்சமாக செயல்படுவது இல்லை என்று ட்விட்டர் மறுப்பு தெரிவித்தது. இந்த பிரச்சனைகளை தொடர்ந்தே தற்போது இந்திய அளவில் பலரும் ட்விட்டரை விட்டு விலகி, இலவசமாக கிடைக்கும் சமூக வலைத்தளமான 'Mastodon'க்கு நகர்ந்து வருகின்றனர். இதுவரை 2.2 மில்லியன் பேர் Mastodonஐ பயன்படுத்தி வருவதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது. (ட்விட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 300 மில்லியனுக்கும் அதிகம்) Mastodon - Twitter: வேறுபாடு என்ன? ஜெர்மனியை சேர்ந்த மென்பொறியாளர் Eugen Rochko என்பவர் 2016ம் ஆண்டில் உருவாக்கிய ஓபன் சோர்ஸ் சமூக வலைத்தளம் தான் Mastodon. இது லினக்ஸ் போன்று செயல்படும் ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் என்பதால் பயனர்கள் தாங்களாகவே சர்வர்களை நிர்மானித்துக் கொண்டு தங்களுக்கென சமுதாயங்களை (Community) உருவாக்கிக்கொண்டு செயல்படலாம். Facebook, Twitter போன்று இரு ஒரு நிறுவனத்தின் கீழ் இயங்குவதில்லை. இதனுடைய தரவுகளும் ஒரே இடத்தில் அல்லாமல் பல இடங்களில் சேமித்து வைக்க முடியும் என்பதால் பாதுகாப்பு பிரச்னைகள் எழுவதில்லை. Mastodon-ல் எப்படி கணக்கு தொடங்குவது: பிற சமூக வலைத்தளங்கள் போல Mastodonல் கணக்கு தொடங்குவதற்கும் ஒரு இ-மெயில் முகவரி, பயனரின் பெயர் மற்றும் கடவுச் சொல் ஆகியவையே போதுமானதாகும். இதில் கணக்கு தொடங்கி பயனர்கள் படங்கள், வீடியோக்கள், மெசேஜ் போன்ற பதிவுகளை மேற்கொள்ளலாம். இதுவும் ட்விட்டர் போன்ற அமைப்பையே பெற்றிருக்கிறது. இதன் சொற்களின் அளவு 500 கேரக்டர்களாகும். இதில் ட்விட்டரை விட அதிகமான வசதிகள் கிடைப்பதாக தெரிகிறது. இருப்பினும் மாபெரும் பயனர் எண்ணிக்கையை கொண்டிருக்கும் ட்விட்டருக்கு, Mastodon எந்த வகையில் சவாலை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டியிருக்கிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு