அயோத்தி தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு!

அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு லக்னோ: அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வாரம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். யார் ஆலோசனை இந்த நிலையில் அயோத்தி வழக்கு குறித்து இன்று இஸ்லாமிய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்த ஆலோசனை நடந்து உள்ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ( All India Muslim Personal Law Board - AIMPLB) தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. என்ன பேசுவார்கள் அயோத்தி வழங்கி தீர்ப்பை ஏற்பதா வேண்டாமா என்று இதில் ஆலோசனை செய்தனர். உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று ஆலோசித்தனர். இதனால் இந்த ஆலோசனை கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றது. முக்கியம் இந்த ஆலோசனையில் இஸ்லாமிய அமைப்பான பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் சன்னி வகுப்பு வாரியம் இரண்டும் கலந்து கொண்டது. முக்கிய தலைவர்கள் இதற்காக டெல்லியில் இருந்து லக்னோ சென்றனர். தீர்ப்பின் சாதக பாதகங்களை இவர் ஆலோசனை செய்தனர். குழப்பம் அயோத்தி நில வழக்கில் சன்னி வகுப்பு வாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறி இருந்தது. இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. என்ன பேட்டி இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் அளித்துள்ள பேட்டியில், எங்களின் மறுசீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். எங்களுக்கு தெரியும். ஆனாலும் நாங்கள் மறுசீராய்வு செய்வோம். அது எங்கள் உரிமை. பாபர் மசூதி கோவிலை இடித்து கட்டப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் நாங்கள் மறுசீராய்வு செய்கிறோம, என்று கூறியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்