மாவட்டங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து தாக்கலாகும் மனுக்களை அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று கமிஷன் விசாரிக்கிறது

மதுரை: ''மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிந்த யாரும் கமிஷனில் புகார் தெரிவிக்கலாம்,'' என மதுரையில் மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தெரிவித்தார். மாவட்டங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து தாக்கலாகும் மனுக்களை அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று கமிஷன் விசாரிக்கிறது. மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களிலிருந்து தாக்கலான 20 மனுக்கள் மீது சித்தரஞ்சன் மோகன்தாஸ் நேற்று விசாரித்தார். மனுதாரர்கள், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஜராயினர். பின் கலெக்டர் வினய் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் மனித உரிமை மீறல்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். அவர் கூறியதாவது: உண்மையை கண்டறியும் பணி கமிஷனுடையது. மனித உரிமை மீறல்கள் தெரிந்த யாரும் கமிஷனில் புகார் தெரிவிக்கலாம். நாங்கள் விசாரித்து குற்றம் புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தருவோம். மனுதாரர்கள் தேவையின்றி சென்னை வருவதை தவிர்க்க கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாக சென்று விசாரித்து வருகிறோம். இதன் மூலம் மனுக்கள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது, என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்