ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என தன் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் காரணம் கூறினாலும், மாணவியின் பெற்றோர் இதனை மறுத்து வந்தனர். இந்நிலையில், மாணவியின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசாருக்கு முக்கியமான தகவல் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் இரு பேராசிரியர்களே காரணம் என்றும், அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும், 8ம் தேதி பதிவு செய்து வைத்துள்ளார். இந்த ஆதாரத்தை கொண்டு மாணவியின் தற்கொலைக்கு குறைந்த மதிப்பெண் காரணமல்ல, பேராசிரியர்கள் தான் என போலீசார் முடிவுக்கு வந்தனர். போராட்டம் இதற்கிடையே, மாணவியின் தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு ஐஐடி வளாகத்தில் 'கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுடன் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். கேரள முதல்வர் கடிதம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார். பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தான், மாணவி தற்கொலை என தந்தை அனுப்பிய புகார் கடிதத்தை பழனிசாமிக்கு அனுப்பினார். இதனால், கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்