ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ள இளைஞர்...!

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக, இளைஞர் ஒருவர் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் ஆழ்துளை கிணறு விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. சமீபத்தில் திருச்சி மணப்பாறை அருகே, ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த முருகன் என்ற இளைஞர், ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் எளிய கருவியை வடிவமைத்துள்ளார். இதில் கம்பிகளின் வழியாக சுலபமுறையில் சைக்கிள் செயின் ராடு உதவியோடு ஆழ்துளை கிணற்றில் இறக்கி, உள்ளே சிக்கியுள்ள குழந்தையை மேலே கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார். செய்முறை விளக்கத்திற்காக பொம்மையை குழிக்குள் இறக்கி, அந்த கருவி மூலம் தூக்கியும் காட்டியுள்ளார். இந்த கருவியை செய்வதற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானதாக அவர் தெரிவித்துள்ளார். முருகன் என்ற இளைஞரின் இந்த கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)