சிங்கப்பூர் அரசுபோலி செய்தியை தடுக்க நடவடிக்கை

தவறான அல்லது போலி செய்திகளை பதியவிடுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கும் புதிய சட்டம் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் அமலுக்கு வந்தது. இதன்மூலம், தவறான செய்திகளை பரப்புவது சட்டவிரோதம் ஆக்கப்பட்டது. இதை கூகுள், ட்விட்டர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சியை சேர்ந்த பிராட் போயர் என்பவர், அரசு குறித்து ஒரு தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதியவிட்டிருந்தார். இதற்கு, அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, தவறான தகவலை உடனே மாற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதன்மூலம், தவறான செய்திகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் நேற்று முதல் முறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.