முதலமைச்சரை நேரில் சந்தித்த லதா ரஜினிகாந்த்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த், தமிழகத்தில், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்தார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை, லதா ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குழந்தைகள் பாதுகாப்பில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ, தனி அமைப்பை ஏற்படுத்த முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார். குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு, மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த லதா ரஜினிகாந்த், குழந்தைகளுக்காக அமைக்கப்படும் தனி அமைப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என பலரும் இடம் பெற வேண்டும் என்றார்.