தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி சுவாமி தரிசனம் செய்தார்.

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி சுவாமி தரிசனம் செய்தார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். வழியில், இரவு 7:40 மணிக்கு, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நடராஜரை தரிசனம் செய்த துர்கா, சிறப்பு பூஜையில் பங்கேற்றார். தில்லை கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூல நாதரையும் வழிபட்டு, கோவிலை வலம் வந்தார். தரிசனம் முடிந்து 8:45 மணிக்கு அவர் வெளியே வந்தார். இரவு சிதம்பரத்தில் தங்கினார். இன்று காலை திருவெண்காடு புறப்பட்டு செல்கிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்