முஸ்லீம்கள் கவனமே செலுத்தாத ஒருதுறை ஊடகத்துறையாகும்.

ஊடகத்துறையின் வணிக வாய்ப்புகளையும் அதன் வலிமைகளையும் அதன் லாபங்களையும் முஸ்லீம்கள் முழுவதுமாக அறிந்து கொள்ளவில்லை அல்லது பயன்படுத்தவில்லை. ஊடகங்களே இன்று உலகின் அரசியலையே மாற்றும் வல்லமையை பெற்றுள்ளன. உலகின் எல்லா மூலைகளிலும் ராபர்ட் முர்டாகின் யூத ஊடகங்களே கோலேச்சுகிறது. தனக்கு போட்டியாக வரும் எல்லாவகை ஊடகங்களையும் வளைத்துப்போடும் முர்டாக்கால் பல மடங்கு விலைபேசியும் மேற்காசியாவின் உண்மைகளை உலகிற்கு அறிவிக்கும் அல்ஜெஸிராவை வாங்க முடியவில்லை. இந்திய அளவில் பிராமண ஊடகங்களே வலுவாக இருந்தன. அவற்றின் வீரியத்தை சில செய்தித்தாள்கள் குறைத்தன. இன்றைய தமிழககாட்சி ஊடகங்களின் பிடி அரசியல் வாதிகளிடமும் அரசியல் கட்சிகளிடமும் இருக்கிறது. தினசரிகள்,வார இதழ்கள்,மாதஇதழ்கள் அனைத்தும் பிராமணர்கள் தீர்மானிக்கும் கருத்துக்களை விதைத்தன. திராவிட அரசியல் எழுச்சி,ஊடகங்களின் பிடியை மெதுவாக பிராமணர்களின் பிடியிலிருந்து சாதாரண மக்களை நோக்கித் திருப்பியது. ஒருகாலத்தில் பலருக்கு செய்தித்தாள்களை படித்தபின்பே அன்றைய பொழுது விடிந்தது. மாலை தினசரிகளின் வளர்ச்சியும் சிறப்பானது.அதுவும் சுடச்சுட செய்திகளை வழங்கியது. இந்த நிலையில் முஸ்லீம்களின் தினசரியாக மணிச்சுடர் தட்டுத்தடுமாறி வெளிவருகிறது. முஸ்லீம்களின் மாதமிருமுறை இதழ்கள், மாத இதழ்கள் பொதுசமூகத்தினருக் கானதாக இருக்கவில்லை. முஸ்லீம் இதழ்கள் அனைத்தும் முஸ்லீம்களுக்கான செய்திகளையே தாங்கி வருகிறது. பொதுசமூகத்திற்கான இதழ்களாக முஸ்லீம்கள் ஊடகங்களை கையாளவில்லை. ஊடகத்தின் வலிமையை முஸ்லீம்கள் சரிவர புரியவும் இல்லை. அதனை வசப்படுத்தும் வழிகளை அறிந்தோ அறியாமலோ செயல்படுத்தவுமில்லை தொடர்கிறேன்...! ⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱ கப்ளிசேட்