வேலூரில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவாகி உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 36வது மாவட்டமான ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிர்வாகப் பணி துவக்க விழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழகத்தின் 36வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ராணிபேட்டை மாவட்டத்தின் நிர்வாக செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்