திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் செல்வமகள் திட்ட புத்தகம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன், ஆசிரியர்கள் தனது மாத ஊதியத்திலும், தன்னார்வலர்கள் வழங்கும் நிதி கொண்டு பள்ளியில் பயிலும் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு செல்வமகள் திட்டத்தில் முதல் தொகையினை கட்டி கணக்கினை துவங்கி வைக்கிறார்கள். சுகன்ய சம்ரிதி திட்டம் என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இத் திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 250 முதல் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 8.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம். குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கணக்கை தொடங்கலாம் . குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம் . ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் துவக்க இயலும். இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்று இருத்தல் வேண்டும். ஒருவேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும். கணக்கைத் திறப்பதில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது. பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம். சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2018 ஜனவரி 1 முதல் 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும். குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம். குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும் என பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் கூறினார். பள்ளி ஆசிரியர்கள் உமா, சகாயராணி, சரண்யா.உஷாராணி மற்றும் சமூக ஆர்வலர் யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)