மானியம் இல்லா சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு..!

மானியம் இல்லா எல்பிஜி அல்லது சமையல் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் இல்லா சமையல் சிலிண்டரின் விலை 76.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நவம்பர் மாதம் முதலே இந்த உயர்த்தப்பட்ட விலை நடைமுறைக்கு வருகிறது. டெல்லியில் சிலிண்டரின் விலை 681.50 ரூபாய் ஆகவும் மும்பையில் 651 ரூபாய் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஒரு சிலிண்டரின் விலை 706 ரூபாய் ஆகவும் சென்னையில் 696 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொல்கத்தா மற்றும் சென்னையில் கடந்த மாதத்தைவிட இம்மாதம் 76 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ சிலிண்டர் 1,204 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. மாதமாதம் சமையல் சிலிண்டரின் விலை உயர்த்தப்படுவது வழக்கமாகி உள்ளது. சர்வதேச அளவில் எல்பிஜி விலை, அந்நிய முதலீடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மானியத் தொகை மாறுபடுகிறது. மத்திய அரசின் விதிமுறைப்படி குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது