கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மாணவர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்ட விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வருடம் வீசிய கஜா புயலில் வீடுகள் உட்பட ஒரு கோடி மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிலர் தன்னார்வலர்கள் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை கொண்டு உருவாக்கிய விதை பந்துகளை மாணவர்கள் வாயிலாகவும், திருமண நிகழ்ச்சிகளில் பரிசு பொருளாகவும் கொடுத்து மாவட்டம் முழுவதும், முக்கியமாக கஜா புயல் பாதித்த பகுதிகளில் விதைக்கப்பட உள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு