கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மலேசிய பணத்தாள் கண்காட்சி

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மலேசிய பணத்தாள் கண்காட்சி திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் பிரதி மாதம் ஒவ்வொரு சேகரிப்பாளர்கள் தனது சேகரிப்பு பணத்தாள்களை காட்சிப்படுத்தி அதன் வரலாறு ,கலாச்சாரம், பண்பாட்டை எடுத்துரைத்து வருகிறார்கள். அவ்வகையில் நாணயவியல் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் தனது சேகரிப்பில் உள்ள கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மலேசிய பணத் தாளை காட்சிப்படுத்தி விளக்கினார். கின்னஸ் உலக சாதனையில் இடம் பணத்தாள் 814 cm² (126.17 in²) அளவாகும். இது A4 காகித அளவை விட பெரியது. இதன் மதிப்பு 600 மலேசிய ரிங்கிட் ஆகும். மலாயா சுதந்திர உடன்படிக்கை கையெழுத்திட்ட 60 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து இப் பணத்தாள் வெளியிடப்பட்டது. இது மலேசியாவின் 600 ரிங்கிட் நினைவார்த்த பணத்தாள் ஆகும்.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், சந்திரசேகரன், கமலக்கண்ணன், சாமிநாதன், இளங்கோவன், லிங்கராஜன், முஹம்மது இஸ்மாயில், யோகேஷ் , வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பார்வையாளராக வருகை தந்த மலேசிய குடிமக்களான தவச்செல்வன் தம்பதியர் மலேசிய நாட்டின் கலாச்சாரத்தை எடுத்துரைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)